மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், 2024-25 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் 21 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 என்ற நிதி உதவித் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

நிதி இலாகாவை வைத்திருக்கும் பவார், சட்டசபையில் தனது பட்ஜெட் உரையில், "முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனா" திட்டம், அக்டோபரில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக ஜூலை முதல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 46,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும், என்றார்.

மற்றொரு நலத்திட்டத்தை அறிவித்த நிதியமைச்சர், 'முக்யமந்திரி அன்னபூர்ணா யோஜனா' திட்டத்தின் கீழ், ஐந்து பேர் கொண்ட தகுதியுள்ள குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.