லத்தூர், மகாராஷ்டிராவின் லத்தூரில் போலீசார் குழந்தை திருமணத்தை முறியடித்து, மணமகன், இருதரப்பு உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட சுமார் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஜூன் 30ஆம் தேதி, நகரின் கடகான் சாலைப் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து போலீஸார் விரைந்து சென்றனர்.

மைதானத்தில் போலீசாரை பார்த்ததும் விருந்தினர்கள் பதறி ஓடினர். மணமகள் மைனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர், புகைப்படக்காரர் மற்றும் சமையல்காரர் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், என்றார்.

சைல்டுலைன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அல்கா சன்முக்ராவ் புகாரின் பேரில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.