கொல்கத்தா: கொல்கத்தா நகரின் நெரிசல் மிகுந்த புர்ராபஜார் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்திருந்த குடோனில் திங்கள்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அடுத்தடுத்து இருந்த இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவியதால், 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்திருந்த குடோனில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தீ பரவியது. குடோனில் எரியக்கூடிய பொருட்கள் இருந்ததால் வேகமாக பரவியது" என்று தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடோன் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் இரண்டும் நகரின் மையப் பகுதியில் உள்ள நகோடா மசூதிக்கு அருகில் உள்ள கோவிந்தோ மோகன் லேனில் உள்ளன. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

தீயை அணைப்பதில் உள்ளூர் மக்களும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவினர், அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, என்றார்.

தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பணியை மேற்பார்வையிட்டார்.

தீ விபத்து குறித்து தடயவியல் குழு விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.