புது தில்லி, ரியாலிட்டி நிறுவனமான புரவங்கரா லிமிடெட், அதன் துணை நிறுவனமான ப்ராவிடன் ஹவுசிங் லிமிடெட், வீட்டுத் திட்டங்களின் மேம்பாட்டுக்காக ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டலிடமிருந்து ரூ.1,150 கோடி திரட்டியுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

"இந்த மூலோபாய ஒத்துழைப்பு, 14.8 மில்லியன் சதுர அடியில் புதிய குடியிருப்பு திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் சதுர அடியை சேர்க்கும். இதன் மூலம் ரூ. 17,100 கோடி ஜி.டி.வி. (மொத்த வளர்ச்சி மதிப்பு) அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்." பெங்களூருவை தளமாகக் கொண்ட புரவங்கரா ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் கூறினார்.

பெங்களூரு ஹைதராபாத், சென்னை, கோவா, கொச்சி, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் பிராவிடன் ஹவுசிங் இதுவரை 15.1 மில்லியன் சதுர அடி திட்டத்தை நாடு முழுவதும் நிறைவு செய்துள்ளது.

"இந்த ஒப்பந்தம், நிறுவனத்தின் நிறுவன நிர்வாகத்தின் மீதும், நாங்கள் எங்கள் வணிகத்தை நடத்தும் விதம் மீதும் எங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது" என்று புரவங்கரா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆஷிஸ் புரவங்கரா கூறினார்.

எச்டிஎஃப்சி கேபிட்டலின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் ரூங்டா கூறுகையில், "புறவங்கராவுடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உயர்தர வீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவோம்" என்றார்.

புரவங்கரா குழுமம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர், மங்களூரு கொச்சி, மும்பை, புனே மற்றும் கோவா ஆகிய ஒன்பது நகரங்களில் சுமார் 48 மில்லியன் சதுர அடியில் 83 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த நில வங்கி சுமார் 41 மில்லியன் சதுர அடி மற்றும் தற்போதைய திட்டங்கள் 29 மில்லியன் சதுர அடி வரை சேர்க்கின்றன.