சிறிது ஓய்வுக்காக அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, அதன் பிறகு கன்னியாகுமரி தேவி கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.

மேலும், தமிழ் கலாச்சார சின்னமான திருவள்ளுவர் சிலை முன்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பிரதமர் இப்போது கன்னியாகுமரி நிலப்பரப்பில் இருந்து விவேகானந்தர் பாறை நினைவகத்திற்கு படகில் செல்கிறார்.

மே 30 முதல் ஜூன் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தங்கியிருக்கும் அவர், ராக் மெமோரியலில் உள்ள தியான மண்டபத்தில் 45 மணி நேரம் தியானம் செய்வார்.

கன்னியாகுமரியில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை தியானம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பிரதமர் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.