குருகிராம் தீயணைப்பு சேவை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அதிகாலை 2.24 மணியளவில் அறிவிக்கப்பட்டது, இதனால் டஜன் கணக்கான தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன.

காலை 10.00 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் குளிரூட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கட்டிடத்தில் ஏற்பட்ட மின்கசிவு அல்லது வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான அழைப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிற்சாலையில் தீ பற்றிக்கொண்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது ஒன்பது பேர் தொழிற்சாலைக்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.