ஹைதராபாத், ஊடகவியலாளர் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவரான சி.எச். ராமோஜி ராவ் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 88.

கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராவ், அதிகாலை 4.50 மணியளவில் காலமானார் என ராமோஜி குழும சேனல்களில் ஒன்றான தெலுங்கானாவின் ஈடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

நகரின் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு சடலம் மாற்றப்பட்டது.